பள்ளத்தில் மினிவேன் சரிந்தது பெண்கள் உள்பட 20 பக்தர்கள் காயம்


பள்ளத்தில்  மினிவேன் சரிந்தது பெண்கள் உள்பட 20 பக்தர்கள் காயம்
x

பள்ளத்தில் மினிவேன் சரிந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

பள்ளத்தில் மினிவேன் சரிந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

செங்கத்தை அடுத்த சேஅகரம், கரியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேனில் வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை நவீன்குமார் ஓட்டினார்.

வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது நிலைதடுமாறிய வேன், சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த சம்பத்ராணி (வயது 26), விஜி (40), சுசீலா (26), சின்னப்பொண்ணு (50) உள்ளிட்ட 20 பக்தர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 பேரும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story