20 அடி உயரத்தில் தயாராகும் விவேகானந்தர் சிலை


20 அடி உயரத்தில் தயாராகும் விவேகானந்தர் சிலை
x

கும்பகோணத்தில் 20 அடி உயரத்தில் விவேகானந்தர் சிலை தயாராகிறது

தஞ்சாவூர்

கும்பகோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் பகுதிகளில் பித்தளை பொருட்கள் தயாரிப்பு மற்றும் உலோக சிலைகள், ஐம்பொன் சிலைகள் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் மற்றும் சிலைகள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுவாமிமலை பகுதியில் பிரமாண்டமான ஆனந்த நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்தநிலையில் கும்பகோணம் கர்ணக்கொல்லை கீழவீதி பகுதியில் உள்ள ஒரு தனியார் சிற்ப கூடத்தில் சிற்பி அமுதலிங்கம் 20 அடி உயரம், 8 அடி அகலத்தில் சுவாமி விவேகானந்தர் உருவச்சிலையை பைபர் பொருட்களை கொண்டு தத்ரூபமாக தயாரித்து வருகிறார். இந்த சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ் பார்வையிட்டு இந்த பணியில் ஈடுபட்டு வரும் சிற்பி மற்றும் தொழிலாளர்களை பாராட்டினார். இந்த சிலை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story