ராமேசுவரம் கடற்கரையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்


ராமேசுவரம் கடற்கரையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கடற்கரையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சியா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கடற்கரையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சியா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கரை ஒதுங்கிய கஞ்சா பார்சல்

ராமேசுவரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரைப்பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ராமேசுவரம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி, துறைமுக போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

சேரான் கோட்டைக்கும் புலித்தேநகருக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த சாக்கு மூடையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட 10 பார்சல்கள் என மொத்தம் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கஞ்சா பார்சல்களை கைப்பற்றி துறைமுக போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்த முயற்சியா?

ஏற்கனவே நேற்று முன்தினம் துறைமுக கடற்கரையில் 8 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அடுத்த நாளே சேரான்கோட்டை கடற்கரை அருகே 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டு படகில் ஏற்ற வைக்கப்பட்டிருந்த போது போலீசாரை கண்டதும் கஞ்சா பார்சல்களை கடற்கரையில் வீசிவிட்டு கும்பல் தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ெதாடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Related Tags :
Next Story