மத்திய அரசின் திட்டங்களால் மதுரையில் 20 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்-மத்திய உரத்துறை மந்திரி பேட்டி
மத்திய அரசின் திட்டங்களால் மதுரை மாவட்டத்தில் 20 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக மதுரையில் மத்திய உரத்துறை மந்திரி கூறினார்.
மதுரை
மத்திய அரசின் திட்டங்களால் மதுரை மாவட்டத்தில் 20 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக மதுரையில் மத்திய உரத்துறை மந்திரி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி ஸ்ரீபக்வந்த் குப தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்தும் மத்திய மந்திரி கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது.
அது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தள்ளது.
அதன்மூலம் ஏராளமானவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
மதுரையில் 4.44 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் 2024-ம் ஆண்டு நிறைவடையும்.
மத்திய அரசின் திட்டங்கள்
இதுபோல், மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் 20 லட்சம் பேர் பயன் அடைந்திருக்கிறார்கள்.
இதுபோல், தமிழகம் முழுவதும் ஏராளமானவர்கள் பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் யூரியா உள்ளிட்ட உரத் தட்டுப்பாடுகள் இல்லை.
மாநில அரசின் தேவைக்கு ஏற்ப யூரியா உள்ளிட்ட உரங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மந்திய மந்திரிக்கு,பா.ஜ.க. மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.