20 லட்சம் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து ெரயில் மூலம் மயிலாடுதுறை வந்தது
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு தேவையான 20 லட்சம் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து ெரயில் மூலம் மயிலாடுதுறை வந்தடைந்தது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு தேவையான 20 லட்சம் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து ெரயில் மூலம் மயிலாடுதுறை வந்தடைந்தது.
சம்பா சாகுபடி பணிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரத்தில் அறுவடைப்பணிகள் தொடங்க உள்ளது. சம்பா நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒருசில நாட்களில் திறக்கப்படும் என நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு தேவையான சாக்குகள் நேற்று ெரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது.
20 லட்சத்து 15 ஆயிரம் சாக்குகள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 31 ெரயில் வேகன்கள் மூலம் இந்த சாக்குகள் வந்தடைந்தன. இதில் 500 சாக்குகள் அடங்கிய 4030 பேல்கள் என மொத்தம் 20 லட்சத்து 15 ஆயிரம் சாக்குகள் வந்துள்ளன. இவற்றை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு, மாணிக்கப்பங்கு, எடமணல் மற்றும் சீர்காழியில் அமைந்துள்ள 4 குடோன்களுக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் 75 ஊழியர்கள் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியினை தரக்கட்டுப்பாட்டு இளநிலை ஆய்வாளர் பிரபாகரன் கண்காணித்தார்.