புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 20 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 20 பேர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக திண்டிவனம் சாரத்தை சேர்ந்த பாரத்(வயது 56), கண்டாச்சிபுரம் அருகே வி.புத்தூர் ரங்கநாதன்(53), விழுப்புரம் அருகே ஆழாங்கால் பரந்தாமன் (42), திண்டிவனம் ஊரல் பச்சையப்பன்(38), விழுப்புரம் அருந்ததியர் தெரு ராஜா (38), மேல்மலையனூர் அருகே வடபாலை சேகர்(54), திண்டிவனம் கிடங்கல் பகவான்(51), வானூர் அருகே பெரியமுதலியார்சாவடி ராமகிருஷ்ணன்(52) உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 200-க்கும் மேற்பட்ட புகையிலை பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.