விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு


விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
x

குன்னம் அருகே விவசாயி வீட்டில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

நகைகள் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 47), விவசாயி. இவரது மனைவி தேவகி (40). இந்தநிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று காலை வழக்கம்போல் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றனர். பின்னர் வயலில் வேலையை முடித்து விட்டு மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு சென்றனர்.

இதையடுத்து வீட்டின் அருகே உள்ள உறவினர் இல்ல திருமண விழாவுக்கு செல்வதற்காக தேவகி பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க முயன்றார். அப்போது அங்கு வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தேவகி அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story