சுற்றித்திரிந்த 20 நாய்கள் பிடிப்பட்டன


சுற்றித்திரிந்த 20 நாய்கள் பிடிப்பட்டன
x

சத்துவாச்சாரியில் சுற்றித்திரிந்த 20 நாய்கள் பிடிப்பட்டன.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்த பொதுமக்களை திடீரென வெறிநாய் கடித்து குதறியது. இதில் 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சத்துவாச்சாரியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையம், பென்ட்லேன்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பகுதிகளில் சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் சுற்றிய 20-க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வேலூர் முத்துமண்டபம் அருகே உள்ள கால்நடைகள் கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு அந்த பகுதியில் விடப்படும் என்று மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.


Next Story