தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
x
திருப்பூர்

திருப்பூர்:

தாராபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தொழிலாளி

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே முத்துகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 26-5-2020 அன்று 5-ம் வகுப்பு படித்த 11 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

20 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பூபதிக்கு 3 பிரிவுகளில் தலா 20 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


Next Story