சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை-மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை-மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Aug 2022 9:31 PM IST (Updated: 29 Aug 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தர்மபுரி

சிறுமி பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பன் (வயது 45). தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது பற்றி தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திம்மப்பனை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிவில் திம்மப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத்பக்ரதுல்லா இன்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.


Next Story