கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை


கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
x

பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் ராமநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 59). கூலித்தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு இவர், 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கற்பகவள்ளி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, ராமராஜ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி இந்த வழக்கை நடத்தி வந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ராமராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.


Next Story