தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 53). கூலி தொழிலாளி. இவர் 5 வயது சிறுமிக்கு கடந்த 8-2- 2020 அன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.



Related Tags :
Next Story