எருது விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன
ஆம்பூர் அருகே எருது விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா கெங்கையம்மன் திருவிழாவையொட்டி எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து ஓடின.
குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story