காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் கைது


காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் கைது
x

ராஜபாளையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம்

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் பிரிவு, சிறுபான்மை பிரிவு, விவசாயிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெயில் நிலைய வளாகம் மற்றும் நிலையத்தின் உள்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலைய வளாகத்திற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

200 பேர் கைது

இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 200 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story