வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல்
அய்யம்பேட்ைட அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்ட அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருட்கள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சோழமாதேவி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட அசரப் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவாிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் குட்கா மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலை சேர்ந்த விக்னேஷ்வரன்(வயது 41) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து நவல்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது
இந்த நிலையில் விக்னேஸ்வரனின் தந்தை பசுபதிகோவில் இந்திரா நகரை சேர்ந்த செல்வராஜ்(61) வீட்டில் இருந்து குட்காவை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் நந்தகுமார்(60) என்பவரது வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் எடுத்து சென்று பதுக்கி வைத்திருப்பதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் அய்யம்பேட்டை போலீசார் விரைந்து சென்று நந்தகுமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் 3 செல்போன்களை கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், அவரது நண்பர் நந்தகுமார், பசுபதிகோவில் புதுத்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர்(41) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.