ஸ்கூட்டரில் கடத்திய 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஸ்கூட்டரில் கடத்திய 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில்:
அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார், தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர் மற்றும் ஊழியர்கள் அஞ்சுகிராமம் பகுதியில் நேற்று மதியம் 1 மணி அளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒருவர் தூத்துக்குடி மாவட்ட பதிவு எண் கொண்ட ஸ்கூட்டரில் மூடைகளை வைத்து சென்று கொண்டிருந்தார்.
சந்தேகத்தின்பேரில் அந்த ஸ்கூட்டரை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினர். அதிகாரிகளைப் பார்த்ததும் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அதில் வந்தவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த ஸ்கூட்டரில் இருந்த 2 பிளாஸ்டிக் மூடைகளை சோதனை செய்தபோது அவற்றில் சுமார் 200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் ஸ்கூட்டரை பறிமுதல் செய்து நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்னர் 200 கிலோ ரேஷன் அரிசி நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.