200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்


200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
x

200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள தனியார் மாவு மில்களில் ரேஷன் அரிசியை பதுக்கி மாவாக அரைக்கிறார்களா? என குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் மில் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. பின்னர் ஆலங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆலங்குடி படேல் நகரில் வாகன சோதனையின் போது ஆலங்குடியை சேர்ந்த அன்புராஜா (வயது 42) சுமார் 200 கிலோ ரேஷன் அரிசியை மொபட்டில் கடத்தி செல்ல முயன்றதை பிடித்தனர். மேலும் அவரை கைது செய்து ரேஷன் அரிசி மூட்டையை பறிமுதல் செய்தனர்.


Next Story