அரசு பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் தேசிய கொடியுடன் உறுதி மொழி ஏற்பு


அரசு பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் தேசிய கொடியுடன் உறுதி மொழி ஏற்பு
x

கோவில்பட்டியில் அரசு பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் தேசிய கொடியுடன் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமையை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயலதா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரத்னகுமாரி வரவேற்றார். தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவிகள் 2 ஆயிரம் பேர் கையில் தேசியக்கொடி ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கண்ணன், சீனிவாசன், சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குனர் காளிராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இசை ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினார்.


Next Story