தடை செய்யப்பட்ட 2,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட 2,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

திருப்பத்தூரில் தடை செய்யப்பட்ட 2,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது பிளாஸ்டிக் கப்புகள். கேரிபேக், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் சுமார் 2,000 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் அதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story