டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.19 அதிகரிப்பு பெட்ரோல் விலை ரூ.1.66 உயர்வு சமையல் கியாஸ் ஒரு ரூபாய் கூடியது


டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.19 அதிகரிப்பு பெட்ரோல் விலை ரூ.1.66 உயர்வு சமையல் கியாஸ் ஒரு ரூபாய் கூடியது
x
தினத்தந்தி 2 Jan 2017 5:15 AM IST (Updated: 1 Jan 2017 11:12 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.66 உயர்த்தப்பட்டது. டீசல் விலை ரூ.1.19–ம், சமையல் கியாஸ் விலை ஒரு ரூபாயும் அதிகரித்தது.

சென்னை,

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.66 உயர்த்தப்பட்டது. டீசல் விலை ரூ.1.19–ம், சமையல் கியாஸ் விலை ஒரு ரூபாயும் அதிகரித்தது.

பெட்ரோல், டீசல்


பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடைசியாக, கடந்த 16–ந் தேதி நள்ளிரவு, பெட்ரோல் விலை ரூ.2.21–ம், டீசல் விலை ரூ.1.79–ம் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இது, ஒரு மாத காலத்தில் 3–வது விலை உயர்வாகும்.

சென்னை


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.29–ம் (வரிகள் நீங்கலாக), டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் (வரிகள் நீங்கலாக) விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.

சென்னையில், ரூ.68.41 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.70.07 ஆக உயர்ந்தது. இதன்மூலம், லிட்டருக்கு ரூ.1.66 விலை உயர்ந்துள்ளது.

டெல்லியில், ரூ.68.94–ல் இருந்து ரூ.70.60 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.71.50–ல் இருந்து ரூ.73.13 ஆகவும், மும்பையில் ரூ.75.27–ல் இருந்து ரூ.76.91 ஆகவும் பெட்ரோல் விலை உயர்ந்தது.

டீசல்


சென்னையில், ரூ.58.28 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.59.47 ஆக உயர்த்தப்பட்டது. இதன்மூலம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.19 அதிகரித்துள்ளது.

டெல்லியில், ரூ.56.68–ல் இருந்து ரூ.57.82 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.58.92–ல் இருந்து ரூ.60.06 ஆகவும், மும்பையில் ரூ.62.40–ல் இருந்து ரூ.63.61 ஆகவும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

சமையல் கியாஸ்


இதுபோல், சமையல் கியாஸ் விலையும் சிலிண்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.593.50 ஆக இருந்தது. அது, ரூ.594.50 ஆக அதிகரித்துள்ளது.

Next Story