‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
உள்தாள் ஒட்டும் பணி
குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி இன்றுமுதல் தொடங்குகிறது. தற்போது உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1–1–2017 முதல் 31–12–2017 வரை நீட்டிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் திகழும் ரேஷன் கார்டுகள் விஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
அமலுக்கு வரவில்லை
2011–ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ‘‘ஸ்மார்ட் கார்டு’’ வழங்கப்படும் என ‘‘அறிவிப்பு’’ வெளியிட்டு, அதற்கு 700 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. 2015–ல் தமிழக சட்டமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ‘‘ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக 318 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றும் ‘‘சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்’’ என்றும் அறிவித்தார்.
ஆனால் இன்றுவரை ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறைவு செய்யப்பட்டு, அந்த இரு மாவட்டங்களில் கூட இத்திட்டம் அமலுக்கு வரவில்லை என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆறாண்டு கால செயல்பாட்டின் லட்சணமாக இருக்கிறது.
தி.மு.க. குற்றச்சாட்டு உறுதி
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 ரேஷன் கார்டுகளில் மீண்டும் ‘‘உள்தாள் ஒட்டும் பணி’’ துவங்கப்படும் என்று இப்போது அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பது ‘‘ஸ்மார்ட் கார்டு’’ அறிவிப்பும் வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. இதுமட்டுமல்ல, கடந்த 6 ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகள் இப்படித்தான் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்ற தி.மு.க.வின் குற்றச்சாட்டு மீண்டும் உறுதியாகியிருக்கிறது.
ஆகவே, சட்டமன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்ன ஆயிற்று, அந்த நிதி எந்தெந்த பணிகளுக்காக செலவிடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு மக்கள் மன்றத்தில் உரிய விளக்கமளிக்க வேண்டும்.
உடனடி நடவடிக்கை
முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள இந்த அரசும் குடும்ப அட்டைகளில் ‘‘தாள் ஒட்டும் பணியில்’’ மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், முகவரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக இருக்கும் குடும்ப அட்டையில் இருக்கும் ஆறாண்டு கால குழப்பத்தை நீக்கி, ஏற்கனவே அறிவித்தபடி ஸ்மார்ட் கார்டு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விலைவாசி உயர்வுகள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முக்கியம் என்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் முதல்–அமைச்சர் மிக முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story