புத்தாண்டு தின கொண்டாட்டம்: மெரினாவில் அலை அலையாய் திரண்ட மக்கள் கூட்டம்
சென்னையில் புத்தாண்டை கொண்டாட அலை அலையாய் மெரினாவில் மக்கள் திரண்டதால், நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டம்
2016–ம் ஆண்டு இனிதே விடைபெற்று, 2017–ம் ஆண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பிறந்தது. புத்தாண்டை கொண்டாட அன்றைய தினம் இரவு 8 மணியில் இருந்தே மக்கள் மெரினாவில் திரண்டனர். இரவு 12 மணி ஆனதும் வான வேடிக்கைகள் வெடித்தும், கேக் வெட்டியும், வண்ண பலூன்கள் பறக்கவிட்டும் உற்சாக ஒலி எழுப்பியும் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
புத்தாண்டை கொண்டாட மெரினாவில் மக்கள் கூடும் விதமாக 31–ந்தேதி இரவு 9 மணியில் இருந்தே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக சென்னை காமராஜர்–ராஜாஜி சாலையில் பல மாற்றம் செய்யப்பட்டது. கடற்கரை சாலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு பின்னர் மக்கள் மெரினாவில் இருந்து கலைந்தனர்.
மக்கள் அலையா?
இந்தநிலையில் புத்தாண்டு தினமான நேற்றும் போக்குவரத்து மாற்ற நடவடிக்கைகள் அமலில் இருந்தன. காலை முதலே வழக்கமான கூட்டத்தை காட்டிலும் மெரினாவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக பிற்பகல் 3 மணிக்கு பிறகு மெரினாவில் மக்கள் கூட்டம் நிறைந்தது. நேரம் செல்ல செல்ல கடல் அலையா? மக்கள் அலையா? என்று கணிக்க முடியாத அளவு மக்கள் கூட்டம் மெரினாவில் அலைமோதியது.
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வந்தனர். காமராஜர் சாலையில் (காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை) நேற்று நள்ளிரவு 2 மணி வரை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் பொதுமக்கள் தங்களது வாகனங்களை ராணிமேரி கல்லூரி, சுவாமி சிவானந்தா சாலை மற்றும் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி பகுதிகளில் நிறுத்தினர்.
மாற்றுப்பாதையில் இயக்கம்
புத்தாண்டு தினமான நேற்று மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இளைஞர் பட்டாளத்தினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளும் வழங்கி மகிழ்ந்தனர். கொண்டாட்டம் அனைத்தும் முடிந்தநிலையில் மாலை 6 மணிக்கு மேல் மெரினாவில் இருந்து பொதுமக்கள் கலைந்து செல்ல தொடங்கினர்.
இதனால் காமராஜர் சாலையே மக்கள் கூட்டத்தில் மறைந்தது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடுமையான அவதி அடைந்தனர். வாகனங்களை போட்டிபோட்டு எடுத்து செல்ல முயன்றதால் அண்ணாசாலை, சுவாமி சிவானந்தா சாலை, லாயிட்ஸ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போர்நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் என்.எஸ்.சி.போஸ் சாலை, ஈ.வெ.ரா.சாலை மற்றும் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட வகையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ், ராமகிருஷ்ண மடம் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
இதேபோல பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கியமான வீதியான 6–வது அவென்யூவில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாததால், இணைப்பு சாலைகளிலும் போக்குவரத்து பாதித்தது. குறிப்பாக வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
எனவே பெசன்ட்நகர் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பெசன்ட்நகர் 4–வது அவென்யூ மற்றும் பிரதான சாலைகளில் நிறுத்திவிட்டு சென்றனர். வாகனங்களை மீண்டும் எடுக்க பொதுமக்கள் போட்டிபோட்டதால் மகாத்மா காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைப்போல நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் தடையை மீறி கடலில் இறங்கிய பொதுமக்கள்
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது கடல் அருகே செல்லக்கூடாது என்றும், கடலில் இறங்கி யாரும் குளிக்கக்கூடாது என்றும் சென்னை மாநகர போலீஸ் தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் புத்தாண்டு தினமான நேற்று மெரினாவில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த அதேநேரத்தில் போலீஸ் பாதுகாப்பும் குறைவாகவே இருந்தன.
இதனால் தடையை மீறி இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்து விளையாட தொடங்கினர். இதைப்பார்த்து பொதுமக்களும் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்து விளையாட தொடங்கினர். போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டார்கள் என்றும் கடல் நீர் அருகே பாதுகாப்பு பணியில் போலீசார் அதிகளவு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Next Story