வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் 5-ந் தேதி சாலை மறியல் போராட்டம்-பி.ஆர். பாண்டியன்


வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் 5-ந் தேதி சாலை மறியல் போராட்டம்-பி.ஆர். பாண்டியன்
x
தினத்தந்தி 2 Jan 2017 11:05 AM IST (Updated: 2 Jan 2017 11:05 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் வருகிற 5-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் வருகிற 5-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக  விவசாயிகள் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சி, தற்கொலை மரணங்களால் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தான் முழு பொறுபபேற்க வேண்டும்.தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து தற்கொலை மரணங்களை தடுத்து நிறுத்திடும் வகையில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தோம்.

கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். தமிழக அரசின் மவுனத்தால் விவசாயிகள் நிலை குலைந்துள்ளனர்.

தமிழக அரசு வறட்சி நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கிடவும், மத்திய அரசு தேவையான நிதியை விடுவிக்கவும் வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளோம்.

போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து பங்கேற்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். இன்று (திங்கட்கிழமை) தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ,  இடதுசாரி 

Next Story