ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

மாநில செய்திகள்

சிவகங்கை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுக்கொலை + "||" + Near Sivaganga Police hit Fleeing Rowdy killed

சிவகங்கை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுக்கொலை

சிவகங்கை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற  ரவுடி சுட்டுக்கொலை
சிவகங்கை அருகே போலீஸ் காரரை அரிவாளால் வெட்டியும், தாக்கியும் தப்ப முயன்ற ரவுடி யை போலீசார் சுட்டுக் கொலை செய்தனர்
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்த வர் கார்த்திகைசாமி (வயது 26). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, மிரட்டல் செய்த தாக வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று கார்த்திகைசாமி தனது ஆதர வாளர்களுடன் மதுரைக்கு காரில் சென்றார். மதுரை  மாவட்டம், கூடக்கோவில் போலீஸ் சரகம், எலியார்பத்தியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் போட்டுள்ளார். அப்போது பங்க ஊழியரான மதுரை கைத்தறி நகரை சேர்ந்த நாகராஜன் என்பவருடன் அந்த கும்பல் தகராறு செய்தது.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திகை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாகராஜனை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரத்த வெள்ளத்தில் அவர் அங்கு மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கி விட்டு தப்பியது.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் படுத்தினர்.

இதனிடையே கார்த்திகை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவகங்கை அருகே காயான்குளம் பகுதியில் உள்ள மூட்புதரில் பதுங்கியிருப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் கார்த்திகைசாமி மற்றும் அவரது கும்பலை சரண் அடையுமாறு போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததோடு திடீரென்று போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார்த்திகைசாமி மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது தப்ப முயன்ற கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்