ஜல்லிக்கட்டு போராட்டம் :’பண்பாட்டை தமிழரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ வடமாநில பெண் பெருமிதம்


ஜல்லிக்கட்டு போராட்டம் :’பண்பாட்டை தமிழரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ வடமாநில பெண் பெருமிதம்
x
தினத்தந்தி 20 Jan 2017 11:20 AM GMT (Updated: 20 Jan 2017 12:26 PM GMT)

உலகமே போற்றும் இந்த இளைஞர்களின் எழுச்சியை பார்த்து ’பண்பாட்டை தமிழரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என டுவிட்டரில் வடமாநில பெண் ஒருவர் பெருமிதம் அடைந்து உள்ளார்.


ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100மணி நேரங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் திறக்காமல் வீடுவாசல் திரும்ப மாட்டோம் என அலங்காநல்லூர் மக்கள் உறுதியுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இது போல் மெரீனா கடற்கரையிலும் போராட்டம் தொடருகிறது.இது போன்ற கண்ணியமான போராட்ட களத்தை மொத்த இந்தியாவிலும் இதுவரை எவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை என உலகமே வியக்கிறது..  தலைமையே இல்லாமல் ராணுவக் கட்டுப்பாட்டோடு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இளம்பெண்களும் பங்கேற்றுள்ள இந்த போராட்டங்களில் இதுவரை எந்த அத்துமீறல்களும் நடைபெறவில்லை.

இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குடும்பம் குடும்பமாக மெரீன கடற்கரை நோக்கி படையெடுத்தனர். அனைத்து குடும்பங்களுமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாணவப் போராட்டத்தில் தங்களது பங்களிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதன் வெளிப்பாடு தான் இப்போது போராட்டக் களங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பெருந்திரளான பெண்கள் கூட்டம்.

திருச்சி முசிறி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று திருமணம் செய்து கொண்ட முசிறியை சேர்ந்த  என்ஜினீ யரிங்   பட்டதாரி   மனுமோகன் (27), சேலத்தை சேர்ந்த ரெஜினா மார்க்கரெட் (23) ஆகியோர்   திருமணம் முடிந்த  கையோடு   கழுத்தில்   மாலையோடும், கையில் பூச்செண்டுடன் போராட்டகளத்திற்கு வந்து போராட்டத்தில்  ஈடுபட்ட வர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உலகமே போற்றும் இந்த இளைஞர்களின் எழுச்சியை பார்த்து  ’பண்பாட்டை தமிழரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என  டுவிட்டரில் வடமாநில பெண் ஒருவர் பெருமிதம் அடைந்து உள்ளார்.
 
இதுகுறித்து வடமாநில பெண் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”நாமும் டெல்லி, பெங்களூரு போன்ற இடங்களில் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால், போராட்டத்தில் பாலியல் சீண்டல் நடைபெறத்தான் செய்தன. ஆனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த போராட்டத்தில் பங்கேற்றாலும், எந்த வன்முறையோ, பாலியல் சீண்டல்களோ நடைபெறவில்லை. எனவே, நாம் தமிழர்களின் பண்பாட்டை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார். 

Next Story