குடியாத்தத்தில் காய்ச்சலால் பாதிப்பு: முழுமையாக விசாரணை நடத்தப்படும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


குடியாத்தத்தில் காய்ச்சலால் பாதிப்பு: முழுமையாக விசாரணை நடத்தப்படும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2017 12:15 AM IST (Updated: 1 Feb 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, தன்னை பேச அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கேட்டார்.

சென்னை,

இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

துரைமுருகன் (தி.மு.க.):–வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பறவை காய்ச்சல் நோயால் 24 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இதில் 4 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக அரசுக்கு தகவல் வந்ததா?

அமைச்சர் கே.சி.வீரமணி:–இவர்கள் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளனர். சென்ற இடத்தில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டதும் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் பதில் குரல் எழுப்பினர்.

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:– இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணை அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும்.

விஜயபாஸ்கர்:–பன்றிக்காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை.

இதற்கிடையே கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அமைச்சர் விஜயபாஸ்கர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். துரைமுருகன்:–அமைச்சரின் கடமை உணர்வை பாராட்டுகிறேன். பறவை காய்ச்சல் என்றேன், பன்றிக்காய்ச்சல் என்கிறீர்கள். எது எப்படியோ காய்ச்சல்.  இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story