சுதந்திரமாக இருக்கிறோம்;பன்னீர்செல்வம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்- அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்
எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என தங்க தமிழ் செல்வன் கூறினார்.
சென்னை,
சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத் தூரில் உள்ள சொகுசு விடுதியில் 9 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெண் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அங்கு தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் நேற்று முன்தினம் விடுதியில் இருந்து திடீரென தப்பி ஓடி வந்தார்.
அவர் மாறுவேடத்தில் தப்பித்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து ஆதரவு தெரிவித்தார்.
மேலும் அவர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். தன்னை சசிகலா ஆதரவாளர்கள் விடுதியில் கடத்தி அடைத்து வைத்து இருந்ததாகவும் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்களை கட்டாயப் படுத்தி அடைத்து வைத்தி ருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
சரவணன் புகார் மனுவை பெற்ற டி.ஜி.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசிக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விசா ரணை நடத்தி வருகிறார்கள். விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்டுடன் போலீஸ் படையுடன் விடுதிக்குள் இன்று சென்றது.எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் காஞ்சீபுரம் எஸ்.பி முத்தரசி மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரிடமும் அவர் விசாரித்தார். தங்களை யாரும் கட்டாயப்படுத்தி வைத்திருக் கிறார்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் எங்களை யாரும் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக சுதந்திரமாக இருக்கிறோம். எந்த மிரட்டலும் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தனர். விசாரணை நடத்தி வரும் போலீசாருடன் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர்.
அறையில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏக்களுடன் ரிசார்ட்டின் வெளியே கட்சியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரிசார்ட்டை காலி செய்யுமாறு எம்.எல்.ஏக்களிடம் உரிமையாளர் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எம்.எல்.ஏக்களை உடனடியாக் அங்கி இருந்து வெளியேறுமாறு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை குறித்து ஆண்டிப்பட்டு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில்,எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். விசாரணையின்போது காவல்துறையினர் மிரட்டுகின்றனர்.
ராஜன் செல்லப்பா கூறுகையில், எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். அறையில் அடைத்து வைத்திருக்கிறோம் என்று கூறுவது பொய்யான தகவல் என்றார்.
விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கியுள்ளோம் ,ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என நம்பிக்கை உள்ளது என பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேட்டி அளித்து உள்ளார்.

Next Story