மாநில செய்திகள்

தலைமைச் செயலகத்தில் போலீஸ் குவிப்பு, நாளை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை + "||" + heavy securtiy in Tn secretriat

தலைமைச் செயலகத்தில் போலீஸ் குவிப்பு, நாளை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

தலைமைச் செயலகத்தில் போலீஸ் குவிப்பு, நாளை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
தமிழக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் கோட்டையைச் சுற்றி ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
சென்னை,

தமிழக சட்டசபையில் நாளை  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. வாக்கெடுப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். சட்டசபைக்குள் சட்டசபை காவலர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

நாளை கோட்டைக்குள் உரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. கார்போன்ற வாகனங்களில் செல்பவர்களும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். எம்.எல்.ஏ.க்கள் செல்லும் வாகனங்களும் சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.