மாநில செய்திகள்

”அதிமுகவினர் அனைவரும் ஒருதாய் மக்கள்”யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை-மாஃபா பாண்டியராஜன் + "||" + Those who do not hate us Pantiyarajan

”அதிமுகவினர் அனைவரும் ஒருதாய் மக்கள்”யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை-மாஃபா பாண்டியராஜன்

”அதிமுகவினர் அனைவரும் ஒருதாய் மக்கள்”யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை-மாஃபா பாண்டியராஜன்
அதிமுகவினர் அனைவரும் ஒருதாய் மக்கள். யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை -என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை,

ஜெயலலிதாவின் மறை வுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவா ளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதர வாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் நாளை தமிழக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார். அவரை தொடர்ந்து  மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:

அதிமுகவினர் அனைவரும் ஒருதாய் மக்கள். யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. மனசாட்சிப்படி வாக்களித்தால் எங்கள் அணியே வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.