பெங்களூரு சிறையில் விதிமுறைகள் மீறப்படுவதால் சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்
பெங்களூரு சிறையில் விதிமுறைகள் மீறப்படுவதால் சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் உருக்காலையில் தனியார்மயம் என்ற கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பயத்துடன் உள்ளனர். அதனை தனியார் மயமாக்குவதை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது. இதற்காக பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
நெடுவாசலில் பொதுமக்கள் 12 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மேலும் கவர்னர், தமிழக முதல்-அமைச்சர் ஆகியோர் நெடுவாசல் கிராமத்திற்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து சமாதானம் பேச வேண்டும். வருகிற 3-ந் தேதி அன்புமணி நெடுவாசல் சென்று மக்களுடன் சேர்ந்து போராட இருக்கிறார்.
மாணவர்கள் குழப்பம்
தமிழகத்தில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே இதுதொடர்பாக அவர்களுக்கு அரசு மற்றும் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து நீட் நுழைவு தேர்வில் விலக்கு அளிக்க அனுமதி பெற வேண்டும்.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் அரசியல் கட்சிக்கு தலைமை வகிக்க தடை செய்ய வேண்டும். அ.தி.மு.க. அரசு நீடிக்காது. பெரும்பான்மை வலிமையை நிரூபிக்க 5 எம்.எல்.ஏ.க்கள் தான் கூடுதலாக இருக்கிறார்கள்.
திகார் சிறைக்கு...
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு சிறையில் விதிமுறைகள் மீறப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அவரை தமிழக சிறைக்கு மாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. எனவே அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
முன்னதாக சேலம் மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Next Story