ஜெயலலிதா மரணத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் ஒரு பட்டியல்


ஜெயலலிதா மரணத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் ஒரு பட்டியல்
x
தினத்தந்தி 1 March 2017 12:14 PM IST (Updated: 1 March 2017 12:13 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணத்தில் ஓ.பி.எஸ். அணியினர் எழுப்பும் சந்தேகங்கள் பட்டியல் கொடுத்து உள்ளனர்.


சென்னை,

தமிழக முதல்-அமைச்ச ராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஜெயலலிதாவின் மரணத் தில் உள்ள மர்மங்களை வெளிப்படுத்த நீதி விசா ரணை நடத்தப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்த போது அறிவித்து இருந்தார்.
ஆனால் இன்று வரை நீதி விசாரணை குறித்து மாநில அரசு எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஓ.பி.எஸ். அணியினர் வருகிற 8-ந் தேதி சேப்பாக்கத்தில் உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிட கோரி ஜனாதிபதியிடம் எம்.பி.க்களும் நேற்று மனு கொடுத்து உள்ளனர்.
ஜெயலலிதா மரணத்தில் ஓ.பி.எஸ். அணியினர் எழுப் பும் சந்தேகங்கள் வருமாறு:-

* ஜெயலலிதா ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டன் வீட்டில் நடந்தது என்ன?
* ஜெயலலிதாவிடம் ஒரு கையெழுத்து வாங்க வீட்டில் வைத்து மிரட்டி அவரை அடித்து கீழே தள்ளிவிட்டதாக கூறுவது உண்மையா?
* ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது அரை மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுவது உண்மையா?
* கறுப்பு பூனை படைக்கு தெரியாமல் ஜெயலலிதாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றது ஏன்?
* ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்போது எங்கே சென்றிருந்தனர்?
* ஜெயலலிதா வீட்டில் இருந்த நர்ஸ் திடீரென காணாமல் போனதாக கூறுவது உண்மையா?
* ஜெயலலிதாவின் கன்னத்தில் ரத்த காயம் வந்தது எப்படி?
* போயஸ்கார்டன் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகள் என்ன ஆனது?
* அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை யாருடைய உத்தரவின் பேரில் ’சுவிட் ஆப்’ செய்தார்கள்?
* ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு சென்ற நாளில் அவரால் நீக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா குடும்பத்தினர் அனைவரும் அங்கு வந்திருந்தது எப்படி?
* தொற்றுநோய் பரவி விடும் என்று ஆஸ்பத்திரியில் யாரையும் அனு மதிக்காத நிலையில் சசிகலாவை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?
* அப்பல்லோ ஆஸ்பத்திரி சேர்மன், அவரது மகள், மருமகன் ஆகியோர் மாஸ்க் போடாமல் ஜெயலலிதா அறைக்கு சென்றது எப்படி?
* ஜெயலலிதாவின் புகைப்படங்களை மறைப்பது ஏன்? பதிவான படங்களை வெளியிடுவதில் இனிமேல் என்ன தயக்கம்?
* தினமும் 2 கோடி பேர் டுவிட்டர், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் சந்தேகங்களை எழுப்பும் போது அதற்கு போயஸ்கார்டன் தரப்பில் எந்த விளக்கமும் தராதது ஏன்?
* ஜெயலலிதா சாவில் மர்மம் கிடையாது என்று சந்தேகப்பட்டவர்கள் வெளிப்படையாக ஆதாரங்களுடன் தெரிவிக்க மறுப்பது ஏன்?
இவ்வாறு  கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story