ஏப்ரல் 1 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: உணவுத்துறை அமைச்சர் காமராஜ்


ஏப்ரல் 1 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்:  உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
x
தினத்தந்தி 2 March 2017 5:27 PM IST (Updated: 2 March 2017 5:26 PM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் 1 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும். பருப்பு, பாமாயிலுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது.பொது விநியோக திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் விருப்பத்தின் பேரிலேயே அரிசிக்கு பதில் கோதுமை வழங்கப்படுகிறது. அரிசி கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து விலையில்லா பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story