கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவுநிதியமைச்சர் ஜெயக்குமார்
பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதிக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் ஒரேவிதமான சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. மாநில அரசுகள் தரப்பில், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:
ஜிஎஸ்டி சட்டத்தால் மாநில அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். பெட்ரோலியம், மதுபானம் முதலிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவு அளித்தது. மாநில அரசுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவது தொடர்பாக, உரிய விளக்கத்தையும் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story