32 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை:பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம்
32 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடிக்கு முதல்-அமைசர் எடப்பாடி பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படை நேற்றும், இன்றும் பிடித்து சென்ற 32 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். மீனவர்கள் மீதான தாக்குதல் பெரும் கவலை தருகிறது. மீனவர்கள் மீதான தாக்குதல்கள் பெரும் கவலையை தருகிறது. ஏற்கனவே சிறையில் உள்ள 53 மீனவர்கள்,128 படகுகளையும் மீட்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர் பிரசனையில் இலங்கைக்கு போதிய நிர்பந்தம் அளிக்கப்படவில்லை.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படை தயவில் பாதுகாப்பின்றி விடப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story