கடன் கொடுக்கவும், வாங்கவும் காவல் துறையினருக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
காவல் துறையினர் கடன் கொடுக்கவும், வாங்கவும் தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
மேலும், பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக கட்டப் பஞ்சாயத்துகளில் காவல் துறையினர் ஈடுபடுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தள்ளுபடிஇந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். இதுதொடர்பாக நடந்த சம்பவம் எதையும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டாமல், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
Next Story