தேச துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு


தேச துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 3 April 2017 1:21 PM IST (Updated: 3 April 2017 1:21 PM IST)
t-max-icont-min-icon

2009ல் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை

2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க  நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஜாமினில் செல்ல விரும்பவில்லை என வைகோ கூறியதால் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Next Story