தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவின்படி மே 14-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை என்றால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
எஸ்.டி.பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு ரத்து
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘இந்த தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றி முறையாக பிறப்பிக்கப்படவில்லை’ என்று கூறி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய அறிவிப்பை வெளியிட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி கூறியிருந்தார்.
காலக்கெடு
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரித்தார்கள். அப்போது, ‘தமிழக உள்ளாட்சி தேர்தலை வருகிற மே 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ என்று காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டனர்.
அதேநேரம், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற என்னுடைய உத்தரவை டிவிசன் பெஞ்சு நீதிபதிகள் தடை விதிக்கவில்லை. அப்படியென்றால், என் உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை அமல்படுத்தவில்லை? இந்த உத்தரவை அமல்படுத்தாததற்காக கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?’ என்று கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பஞ்சாயத்துராஜ் சட்டம்
இதற்கிடையில், மாற்றம் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்த பாடம் ஏ.நாராயணன் தன்னையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி, புதிய பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்கவேண்டும். தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டதால், வருகிற ஏப்ரல் 24-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தேர்தலை நடத்த முடியாது
அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட வாக்காளர் பட்டியலை பெற்று, அதை சரிபார்க்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களின் முகவரியின் அடிப்படையில், வார்டுகளை பிரித்து வாக்காளர் பட்டிலை தயாரிக்க வேண்டும். எனவே, ஐகோர்ட்டு உத்தரவின்படி, மே 14-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க இயலாது. எனவே, தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
தடை வேண்டும்
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், ‘உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும், மே 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற டிவிசன் பெஞ்சு நீதிபதிகளின் உத்தரவுக்கும் தடைவிதிக்க வேண்டும். இந்த தடை விதிக்கப்படவில்லை என்றால், கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது’ என்று வாதிட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். அல்லது அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.
நீதிபதிகள் எச்சரிக்கை
பின்னர், ‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் மீண்டும் பதில் மனுக்கள் தாக்கல் செய்து இந்த ஐகோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது. மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுக் கொண்டே இருக்க முடியாது. ஏற்கனவே மே 14-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென டிவிசன் பெஞ்சு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க வேண்டியது வரும்’ என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Next Story