தோல்வி பயத்தால் தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்துள்ளார்: தீபா குற்றச்சாட்டு


தோல்வி பயத்தால் தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்துள்ளார்: தீபா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 April 2017 7:07 PM IST (Updated: 10 April 2017 7:07 PM IST)
t-max-icont-min-icon

தோல்வி பயத்தால் தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்துள்ளார் என்று தீபா குற்றம் சாட்டினார்.

சென்னை,

ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானது குறித்து  எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்ட தீபா கருத்து தெரிவித்தார்.  தீபா கூறியதாவது:-  ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து தேவையான நடவடிக்கை. நியாயமான முறையில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும். வருமானவரித்துறையினர் சோதனை மூலம் ஆட்சியாளர்களின் ஊழல் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. பணப்பட்டுவாடா உண்மை என்பதை கண்டறிந்து தேர்தலை ரத்து செய்ததை வரவேற்கிறேன்.  

ஊழல் வழக்கில் சிக்கிய தினகரனின் வேட்பு மனுவை ஏற்றிருக்க கூடாது. தினகரன் தேர்தலில் போட்டியிடாத வகையில் 
வழக்கு தொடரப்படும் ஆர்.கே நகரில் எப்போது தேர்தல் நடத்தினாலும் வெற்றி பெறுவேன். ஆர்.கே. நகரில் தேர்தல் ரத்தானதில் பாஜக தலையீடு என்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story