முதல்வருடன் அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்திப்பு பேச்சு வார்த்தை நடப்பது என்ன?
முதல்வருடன் அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
சென்னை
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.குறிப்பாக, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா ஆதரவு பெற்ற டி.டி.வி.தினகரன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.வுக்கு 2 அணி நிர்வாகிகளும் சொந்தம் கொண்டாடிய நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னதாக அ.தி.மு.க.வும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கியதால் அவருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து அவர்கள் நீக்க வலியுறுத்தியும், டி.டி.வி.தினகரன் அதனை ஏற்கவில்லை.
இதனால், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற என்ன வழி என்பது குறித்து ஆலோசனை நடத்த தொடங்கினர்.
இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை காலையிலும், மாலையிலும் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய முக்கிய ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை, எங்கள் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்றும், ஒன்றாக செயல்பட வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் கருத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார். இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தற்போது தொடங்கியுள்ளது.
அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. (அம்மா) சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், மற்றும் வேணுகோபால் எம்.பி ஆகிய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த குழுவினர் இரு அணிகளையும் இணைக்கும் முதல் கட்ட பணிகளை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் , ஆகியோர் இன்று காலை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பிறகு அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அடையாறு இல்லத்தில் டி.டி.வி. தினகரனை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்கள். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும் கலந்து கொண்டார். ஆனால் முதல்வரை சந்தித்த வேலுமணியோ, தங்க மணியோ தினகரனை போய் சந்திக்கவில்லை.
நேற்று பரபரப்பான சூழலில் 25 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதும் தங்கமணி வீட்டில்தான்.இன்று காலை ஐஎன்எஸ் போர்க்கப்பலில் அமைச்சர்கள் , 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, கரையில் இருக்கும் வேலுமணியும் , தங்கமணியும் தினகரனை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன், கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என இன்றைய முதல்வருடனான அமைச்சர்கள் சந்திப்பில், எடுத்துரைக்கப்பட்டிருக்கும் என்பதாகவே கருதப்படுகிறது.

Next Story