மாநில செய்திகள்

அங்கிகரீக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை தொடரும் ஐகோர்ட் உத்தரவு + "||" + Uncontrolled housing Make a certificate The ban will continue Court order

அங்கிகரீக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை தொடரும் ஐகோர்ட் உத்தரவு

அங்கிகரீக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை தொடரும் ஐகோர்ட் உத்தரவு
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரபதிவு செய்ய தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

சென்னை

சென்னை ஐகோர்ட்டில், யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், ‘தமிழகத்தில் விவசாய நிலங்களை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க அதுபோன்ற நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை தடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விளைநிலங்களை அங்கீகாரமற்ற வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடைவிதித்து செப்டம்பர் 9–ந் தேதி உத்தரவிட்டது.பின்னர் அந்த உத்த்ரவௌ தளர்த்தபட்டது.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரபதிவு செய்ய தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் இன்று கூறியுள்ளது.

இடைக்கால தளர்வை ரத்து செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விதிகளை உருவாக்கி தாக்கல் செய்யும் வரை தடை தொடரும். எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தடையை ஏன் நீக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை மே 4,5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.இடைக்கால தளர்வை நீக்கக்கூடாது என்ற ரியல் எஸ்டேட் தரப்பினர் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.