சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4-வது தளத்தில் மீண்டும் தீ பற்றி எரிவதால் பரபரப்பு


சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4-வது தளத்தில் மீண்டும் தீ பற்றி எரிவதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jun 2017 7:13 PM IST (Updated: 1 Jun 2017 7:13 PM IST)
t-max-icont-min-icon

தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4-வது தளத்தில் மீண்டும் தீ பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை,

இடிப்பு பணி தொடங்க இருக்கும் நிலையில் மீண்டும் தீ கட்டடத்தின் 4-வது தளத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  17 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. என்றாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. தி.நகரில் சென்னை சில்க்ஸ் தீ விபத்தில் ரூ. 300 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இடிப்பு பணி தொடங்க இருக்கும் நிலையில் மீண்டும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4-வது தளத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story