தியாகராயநகரில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி நாளை அதிகாலை தொடங்கும்


தியாகராயநகரில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி நாளை அதிகாலை தொடங்கும்
x
தினத்தந்தி 1 Jun 2017 8:00 PM IST (Updated: 1 Jun 2017 8:00 PM IST)
t-max-icont-min-icon

தியாகராயநகரில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிப்புக்கான ஆயுதங்கள் நீடிப்பதால் கட்டட இடிப்பு நாளை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  17 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின.

இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் நாளை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இன்று மாலை தொடங்க இருந்த இடிப்பு பணி நாளை அதிகாலை தொடங்கும். கட்டடத்தின் 4-வது தளத்தில் மீண்டும் தீ பற்றியதால் இடிக்கும் பணியை ஒத்தி வைத்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இடிப்புக்கான ஆயுதங்கள் நீடிப்பதால் கட்டட இடிப்பு நாளை தொடங்கும் என கூறப்படுகிறது.  கட்டடத்தை முழுமையாக இடிக்க 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story