தனியார் நிறுவன ஊழியர் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளையராஜா என்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளையராஜா என்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளையராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தாரா? அல்லது உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
அண்மைக்காலமாகவே வட இந்தியர்களுடன் கலந்து பணியாற்றும் இடங்களிலும், படிக்கும் இடங்களிலும் தமிழர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர்ந்திருந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது சென்னை அருகிலேயே இளையராஜா என்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். இது குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும். அதுமட்டுமின்றி, இளையராஜாவின் குடும்பத்திற்கு இன்போசிஸ் நிறுவனமும், தமிழக அரசும் தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story