மாடுவளர்ப்பு தொழிலை முடக்குவது தான் பா.ஜனதா ஆட்சியின் நோக்கம் தொல்.திருமாவளவன் பேட்டி


மாடுவளர்ப்பு தொழிலை முடக்குவது தான் பா.ஜனதா ஆட்சியின் நோக்கம் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 1 Jun 2017 11:21 PM IST (Updated: 1 Jun 2017 11:20 PM IST)
t-max-icont-min-icon

மாடுவளர்ப்பு தொழிலை முடக்குவது தான் பா.ஜனதா ஆட்சியின் நோக்கமாக உள்ளது என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

கடலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு வந்திருந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கார்ப்பரேட் அரசு

மாடு வளர்ப்பு தொழிலை முடக்குவது தான் பாரதீய ஜனதா ஆட்சியின் நோக்கமாக உள்ளது.

மாடுகள் வணிகத்தை சுரண்டி சில பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய அரசு மக்கள் சார்ந்த அரசாக இல்லாமல் கார்ப்பரேட் அரசாக உள்ளது. மாட்டின் தோல், எலும்பு, கொம்பு, கறி ஆகிய அனைத்தும் ஏதேனும் ஒரு தொழிலுக்கு பயன்படுகிறது. மாடு வணிகம் குறித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்பப்பெறும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

தீயணைப்பு துறை மீது சந்தேகம்

நவீன தொழில்நுட்பம் உருவாகி உள்ள காலக்கட்டத்தில் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை பல மணி நேரம் போராடி அணைக்கின்றனர். இதை பார்க்கும் போது, தீயணைப்பு துறை இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்ற சந்தேகம் தான் எழுகிறது.

தமிழ்நாட்டில் மின்வாரியம் மற்றும் தீயணைப்பு துறையினர் நவீன தொழில் நுட்பங்களுடன் செயல்படவில்லை.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.


Next Story