விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் தலைமை நீதிபதியிடம், டிராபிக் ராமசாமி முறையீடு


விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் தலைமை நீதிபதியிடம், டிராபிக் ராமசாமி முறையீடு
x
தினத்தந்தி 2 Jun 2017 12:45 AM IST (Updated: 2 Jun 2017 12:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, ‘விதி மீறிய கட்டிடங்களால் தான் விபத்து ஏற்படுகிறது.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக டிராபிக் ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, ‘விதி மீறிய கட்டிடங்களால் தான் விபத்து ஏற்படுகிறது. எனவே விதிமீறிய கட்டிடங்களுக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர், விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். இதைதொடர்ந்து, புதிய மனு தாக்கல் செய்ய டிராபிக் ராமசாமிக்கு, தலைமை நீதிபதி அனுமதி அளித்தார். மேலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Next Story