கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். முடிவில், 68 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்று மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். சைதை துரைசாமி 65,943 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
ஐகோர்ட்டில் வழக்கு
மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ‘தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்துள்ளார். மேலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டார். இதற்கு அதிகாரிகளும் துணையாக இருந்தனர். எனவே, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது’ என்று அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
வெற்றி பெற்றது செல்லுபடியாகும்
இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மு.க.ஸ்டாலின், சைதை துரைசாமி ஆகியோர் வழக்கு தொடர்பான தங்களது ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். மேலும், அவர்கள் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மு.க.ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மு.க.ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லுபடியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story