ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாக தலைமை நீதிபதியிடம் முறையீடு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி
ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர்கள் மறுப்பதாக தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் முறையிட்டார்.
சென்னை,
ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர்கள் மறுப்பதாக தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் முறையிட்டார். இதைத்தொடர்ந்து அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி அனுமதி அளித்தார்.
தடை நீக்கம்
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இருப்பினும் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதை தடுக்க உரிய கொள்கைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த மாதம் 4-ந் தேதி 2 அரசாணைகளை வெளியிட்டு அவற்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட அனைத்து மனைப்பிரிவுகளையும் அங்கீகரிக்க உருவாக்கப்பட்ட விதிகளை ஏற்றுக்கொண்டு பத்திரப்பதிவுக்கான தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், இந்த பத்திரப்பதிவுகள் அனைத்தும் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
இந்த நிலையில், பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர்கள் மறுப்பதாகவும், எனவே பத்திரப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று நெல்லை ரியல்எஸ்டேட் சங்கம் சார்பில் வக்கீல் காஜாமுகைதீன் கிஸ்தி என்பவர் நேற்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்தார்.
அப்போது நீதிபதிகள், ‘அனைத்து நிலங்களையும் பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்வதற்கு தகுதியான நிலங்களை சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் அதை எதிர்த்து உரிய கோர்ட்டில் வழக்கு தொடரலாம்’ என்றனர்.
‘ஐகோர்ட்டு உத்தரவை பத்திரப்பதிவு அதிகாரிகள் மதிக்காததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று வக்கீல் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

Related Tags :
Next Story