ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தருவதாக 11 பேரிடம் பணம் பறிப்பு சென்னையில் ஒரே நாளில் ரூ.15 லட்சம் மோசடி
ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தருவதாக கூறி சென்னையில் ஒரே நாளில் 11 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி நடந்துள்ளது. வ
சென்னை,
ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தருவதாக கூறி சென்னையில் ஒரே நாளில் 11 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி நடந்துள்ளது. வட மாநில கும்பல் நூதனமான முறையில் தொடர்ந்து இதுபோன்ற பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பண மோசடி
வங்கி ஏ.டி.எம். கார்டுகளை புதுப்பித்து தருவதாக செல்போனில் பேசி வட மாநில கொள்ளையர்கள் நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது. ஏதாவது ஒரு வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக செல்போனில் சொல்வார்கள். வங்கி ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க போவதாக கூறி அதன் ரகசிய குறியீட்டு எண்ணை கேட்பார்கள்.
வங்கி மேலாளரே பேசுகிறார் என வாடிக்கையாளர்களும் நம்பி ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கின்றனர். பின்னர் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுகின்றனர்.
ஒரே நாளில் 11 பேர்
இதுபோன்ற நூதன மோசடி வலையில் சென்னையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 பேர் சிக்கி ரூ.15 லட்சத்தை இழந்துள்ளனர். அயனாவரம் பஸ் டிப்போவில் கண்டக்டராக வேலை பார்க்கும் மோகன் (வயது 56), ரூ.50 ஆயிரத்தை பறிகொடுத்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரது மனைவியின் சிகிச்சை செலவுக்காக வங்கியில் வைத்திருந்த பணத்தை வடமாநில கும்பல் அபகரித்து விட்டது.
நுங்கம்பாக்கம் டி.பி.ஐ.யில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 2 பெண் ஊழியர்களும் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஒரு பெண் ரூ.1½ லட்சத்தையும், இன்னொரு பெண் ரூ.40 ஆயிரத்தையும் பறிகொடுத்துள்ளார். இதேபோல் பணத்தை பறிகொடுத்த 11 பேரும் கண்ணீருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வங்கி மோசடி பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
வடமாநில கும்பல்
இந்த கொள்ளையர்கள் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் முகாமிட்டு செல்போனில் பேசியே பணத்தை சுருட்டி வருகிறார்கள். ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தருகிறோம் என்று செல்போனில் யாராவது பேசினால் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை போலீசாரும், வங்கி அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும் தொடர்ந்து வட மாநில கும்பலிடம் இதுபோன்ற மோசடியில் சிக்கி பணத்தை மக்கள் இழக்கிறார்கள். இனியாவது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story