தஞ்சையில் விவசாயிகள் உண்ணாவிரதம் பழ.நெடுமாறன்-பி.ஆர்.பாண்டியன் பங்கேற்பு


தஞ்சையில் விவசாயிகள் உண்ணாவிரதம் பழ.நெடுமாறன்-பி.ஆர்.பாண்டியன் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Jun 2017 2:00 AM IST (Updated: 2 Jun 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் 12-ந் தேதி காவிரி நீரை மத்திய அரசு பெற்று தரக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் தஞ்சையில் தொடங்கியது.

தஞ்சாவூர்,

ஜூன் 12-ந் தேதி காவிரி நீரை மத்திய அரசு பெற்று தரக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் தஞ்சையில் தொடங்கியது. இதில் பழ.நெடுமாறன்- பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

உண்ணாவிரதம்

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி காவிரி நீரை பெற்று தர வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக வாழ்வாதாரத்தை அபகரிக் கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது.

இதற்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெக்லான் பாகவி, திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

5-ந் தேதி வரை

இதில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம்ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். 5-ந் தேதி மாலை 4 மணிக்கு உண்ணாவிரதத்தை புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முடித்து வைத்து பேசுகிறார்.

Next Story