ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற பிரதாப் முருகனுக்கு வைகோ பாராட்டு
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற பிரதாப் முருகனுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
நடந்து முடிந்த அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்.) தேர்வில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்த பிரதாப் முருகன் தமிழ்நாட்டில் முதலிடமும், அகில இந்திய அளவில் 21–வது இடமும் பெற்றது தமிழ்நாட்டிற்கே பெருமையாகும் என்று சென்னையில் அவர் வசிக்கும் இல்லத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பேன் என்று வைகோவிடம் பிரதாப் முருகன் கூறினார்.
ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து முனைப்புடன் கல்வி பயின்று உயர்ந்த வெற்றியைப் பெற்றுள்ள இளைஞரான நீங்கள் நிர்வாகத்துறையில் உன்னதமான இடத்தை அடைந்து பெருமைக்குரிய சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று வைகோ பாராட்டு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, ம.தி.மு.க. தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழகக்குமார், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணி, செய்தி தொடர்பாளர் வக்கீல் கோ.நன்மாறன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் டி.சி.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story